Enable Javscript for better performance
தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 7 ஆண்டு சிறை- Dinamani

சுடச்சுட

    

    மனைவியை தற்கொலைக்கு தூண்டி அவரது உயிரிழப்புக்கு காரணமான கணவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கோவை அருகே அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் என்கிற ஜெயச்சந்திரன். இவரது மனைவி மஞ்சுளா (30). குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மஞ்சுளா தற்கொலை செய்து கொண்டார்.

    ஆனால் மஞ்சுளாவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஜெயச்சந்திரன் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், குற்றம்சாட்டப்பட்ட ஜெயச்சந்திரனுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai