சுடச்சுட

  

  பல்லி விழுந்த முட்டை பப்ஸ் சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட இளைஞர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் (28). தனியார் நிறுவன ஊழியர். ஒப்பணக்கார வீதியில் உள்ள பேக்கரிக்கு ஜேம்ஸ் தனது நண்பர்களுடன் செவ்வாய்க்கிழமை சென்றார். அங்கு முட்டை பப்ஸ் மற்றும் குளிர்பானம் சாப்பிட்டனர். அப்போது ஜேம்ஸ் சாப்பிட்ட பப்ஸின் சுவை வித்தியாசமாக இருந்துள்ளது. பப்ஸில் கருகிய நிலையில் பல்லி இருந்தது தெரியவந்தது. இதனால் ஜேம்ஸýக்கு குமட்டல் மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜேம்ûஸ அவரது நண்பர்கள், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

  மேலும், பல்லி விழுந்த பப்ஸ் விற்பனை செய்த பேக்கரி மீது கோவை உணவு பாதுகாப்பு பிரிவு அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து பல்லி விழுந்த பப்ஸ் மற்றும் பேக்கரியில் சில உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இவை பரிசோதனைக்கு உள்படுத்தப்படவுள்ளன. பரிசோதனைக்குப் பிறகு பேக்கரி உரிமையாளருக்கு சம்மன் அனுப்பப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai