சுடச்சுட

    

    பாலியல் பலாத்கார வழக்கில் கைதான இளைஞருக்கு மருத்துவப் பரிசோதனை

    Published on : 18th June 2014 06:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொள்ளாச்சியில் தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான இளைஞர் வீராச்சாமிக்கு (23) கோவையில் செவ்வாய்க்கிழமை மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

    பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட வீராச்சாமி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் போலீஸ் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை அழைத்து வரப்பட்டார்.

    மருத்துவமனையின் தடய அறிவியல் துறையில் வீராச்சாமிக்கு ஆண்மைத் தன்மை குறித்த பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai