சுடச்சுட

    

    பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு

    Published on : 18th June 2014 06:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா  திங்கள்கிழமை நடைபெற்றது.

     காரமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வில், சிறந்த மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு மருத்துவர் சி.கேசவன் நினைவாக ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    விழாவிற்கு, தலைமையாசிரியர் மந்திரபதி தலைமை வகித்தார். ஆசிரியை தமிழரசி வரவேற்றார். இதில் கடந்த பிளஸ் 2 தேர்வில் 1,139 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவி ரீனாஸ்ரீ-க்கு ரூ. 10 ஆயிரம், தமிழ் பாடத்தில் 192 மதிப்பெண் எடுத்ததற்காக ரூ. 4500 வழங்கப்பட்டது.

    இரண்டாமிடம் பெற்ற மாணவர் கார்த்திக் ராஜாவிற்கு ரூ. 5000,  பிளஸ் 2 தேர்வில் உயிரியல் பாடத்தில் 190 மதிப்பெண்கள் பெற்ற மாணவி பிரியங்கா செல்வமரியாளுக்கு ரூ. 10 ஆயிரம், ஆங்கில பாடத்தில் 190 மதிப்பெண் பெற்றதற்காக ரூ. 4500 வழங்கப்பட்டது.

    அதேபோல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் 4 இடங்களை பிடித்த மாணவர்கள் செüந்தர்யா, பாரத்குமார், பாக்கியலட்சுமி, விமல்குமார் ஆகியோருக்கு தலா ரூ. 1000 பரிசாக வழங்கப்பட்டது.

    பரிசுத் தொகையை மறைந்த மருத்துவர் கேசவன் நினைவாக, அவரது மனைவி செல்லம்மாள் கேசவன், மாணவர்களுக்கு வழங்கினார்.

    இதில், வங்கி முதுநிலை மேலாளர் நந்தகுமார், மருத்துவர் கேசவன் குடும்பத்தை சேர்ந்த குருகேசவகுமார், கிருஷ்ணமோகன், முரளிகிருஷ்ணன், மருத்துவர் சி.வெள்ளியங்கிரி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai