சுடச்சுட

    

    பொள்ளாச்சி அருகே செவ்வாய்க்கிழமை இரவு பாஜக நிர்வாகி வீட்டில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் புகுந்து ரூ. 2 லட்சம் பணம் மற்றும் 25 பவுன் நகைகளை கொள்ளயடித்துச் சென்றனர்.

    பொள்ளாச்சியை அடுத்த மன்னூரை சேர்ந்தவர் கதிர்வேல். பாஜக மாவட்ட  விவசாய அணி பொதுச்செயலாளர். இவரது வீடு பொள்ளாச்சி-பாலக்காடு  மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு கதிர்வேல் டிவி  பார்த்துக்கொண்டிருந்தார். அவரது மனைவி சமையல் செய்துகொண்டிருந்தார். வீட்டின் முன்புறக்கதவு திறந்திருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், வீட்டுக்குள் முகமூடியுடன் புகுந்த மூன்று மர்ம நபர்கள்,  கதிர்வேல் மற்றும் அவரது மனைவியை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.  கதிர்வேலின் கை, கால்களை கட்டிப்போட்டு வீட்டில் இருந்து ரூ.2 லட்சம்   பணம் மற்றும் 25 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    கொள்ளையர்கள் சென்றவுடன் கதிர்வேலின் மனைவி அருகில் உள்ள பொதுமக்களை உதவிக்கு அழைத்துள்ளார். பொள்ளாச்சி தாலுகா போலீஸாருக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai