Enable Javscript for better performance
மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க விதிவிலக்கு: முதல்வருக்கு மனு- Dinamani

சுடச்சுட

    

    மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க விதிவிலக்கு: முதல்வருக்கு மனு

    Published on : 18th June 2014 05:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வால்பாறை பகுதியில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்க விதிவிலக்கு அளிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு வால்பாறை வணிகர் சங்கத்தினர் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

    மனுவில் உள்ள விவரம் வருமாறு:

    தமிழக அரசால் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், வால்பாறை நகராட்சி அதிகாரிகள் குடியிருப்பு மற்றும் கடைகளின் முன்புறம் தொட்டி அமைக்க வலியுறுத்தி வருகின்றனர்.

    மழைநீர் சேகரிப்புத் தொட்டி சமவெளிப் பகுதிகளில் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் மலைப்பிரதேசமான வால்பாறை பகுதியில் மழைநீர்த் தொட்டி அமைத்தால் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் இடியும் அபாயம் உள்ளது. எனவே, வால்பாறை பகுதியில் மழைநீர்த் தொட்டி அமைக்க விதிவிலக்கு அளிக்க வேண்டும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai