சுடச்சுட

  

  கோவை மாநகராட்சி சார்பாக நேரு விளையாட்டு அரங்கில் ஜூன் 21 ஆம் தேதி மழைநீர் சேகரிப்பு குறித்த ரங்கோலி மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற உள்ளன.

  மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

  இதன் ஒரு பகுதியாக ஜூன் 21ஆம் தேதி சனிக்கிழமை காலை 7 மணிமுதல் 10 மணி வரை பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் ரங்கோலி மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற உள்ளன.

  போட்டியில் கலந்து கொள்பவர்கள், மழைநீர் சேகரிப்பால் ஏற்படும் பயன்கள் மற்றும் மழைநீரை சேகரிக்க தவறினால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து பாமர மக்களுக்கு புரியும் வகையில் ரங்கோலி மற்றும் ஓவியங்கள் வரைய வேண்டும்.

  இப்போட்டிகளானது 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு முதல் பிரிவாகவும், 9, 10, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 2 ஆம் பிரிவாகவும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 3 ஆம் பிரிவாகவும் நடத்தப்படவுள்ளன.

  ஓவியப் போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு சார்ட் பேப்பர் மட்டும் வழங்கப்படும். ஓவியம் வரைவதற்கான மற்ற பொருள்களை போட்டியாளர்களே கொண்டு வர வேண்டும்.

  போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 21ஆம் தேதி காலை 7 மணிக்கு நேரு விளையாட்டு அரங்கில் தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் 3 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் க.லதா தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai