சுடச்சுட

  

  குடும்பத் தகராறில் பெண் மர்மச் சாவு: உறவினர்கள் முற்றுகை

  By கோவை,  |   Published on : 19th June 2014 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குடும்பத் தகராறில் பெண் மர்மமான முறையில் இறந்ததாகக் கூறி, மகளிர் காவல்நிலையத்தை உறவினர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

  கோவை கணபதிபுதூரில் வசித்து வருபவர் பாரம் தூக்கும் தொழிலாளி ஷேக் இப்ராகிம். இவருடைய மனைவி மதுரையைச் சேர்ந்த ஷபினா பேகம் (25). இந்த தம்பதிக்கு 2 வயது பெண் குழந்தையும், 8 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

  இந்நிலையில், தம்பதி இடையே அடிக்கடி குடும்பச் சண்டை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. வழக்கம் போல் செவ்வாய்க்கிழமையும் தகராறு ஏற்பட்டுள்ளது.

  மனமுடைந்த ஷபினா பேகம், அவரது சகோதரரை தொடர்புகொண்டு தனது கணவர் துன்புறுத்துவதாக கூறியுள்ளார்.

  இதற்கிடையில் வீட்டை காலி செய்யுமாறு அதன் உரிமையாளர் கூறியுள்ளார்.

  இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை வீட்டில் ஷபினா பேகம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மனைவி இறந்துவிட்டதாக உறவினர்களிடம் கூறியுள்ளார் ஷேக் இப்ராகிம்.

  சடலத்தை பார்த்த உறவினர்கள், ஷபினா பேகம் தற்கொலை செய்யவில்லை; அவரது சாவில் மர்மம் உள்ளது எனக் கூறி, ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

  இதையடுத்து ஷேக் இப்ராகிமை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது காவல்நிலையத்தில் கூடியிருந்த ஷபினாவின் உறவினர்கள் ஷேக் இப்ராகிமை தாக்கியுள்ளனர். இதனால் காவல்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

  இந்நிலையில் ஷபினா மர்மமான முறையில் இறந்ததாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவைத் தொடர்ந்து வழக்கு மாற்றியமைக்கப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai