Enable Javscript for better performance
நியாயவிலைக் கடை திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சியை அடுத்த சிக்கராயபுரம் கருமாண்டகவுண்டனூரில் நியாயவிலைக் கடை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    சிக்கராயபுரம் கருமாண்டகவுண்டனூரில் நியாயவிலைக் கடை அமைக்க வேண்டும் என, பொள்ளாச்சி எம்.எல்.ஏ. முத்துகருப்பண்ணசாமியிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து, எம்.எல்.ஏ. நிதியில் இருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டு, நியாயவிலைக் கடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரன் தலைமை வகித்து கடையைத் திறந்துவைத்தார்.

    இன்த விழாவில் பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சக்திவேல், வடக்கு ஒன்றியக் குழுத் தலைவர் செல்வி பத்மினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில், அம்மா பேரவை கிளை செயலாளர் பிரபுராம், அதிமுக கிளை செயலாளர் சிவசுப்ரமணியம் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai