Enable Javscript for better performance
பலாத்கார வழக்கு: பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மருத்துவப் பரிசோதனை- Dinamani

சுடச்சுட

    

    பலாத்கார வழக்கு: பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மருத்துவப் பரிசோதனை

    By கோவை,  |   Published on : 19th June 2014 03:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு கோவையில் புதன்கிழமை மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

    பொள்ளாச்சியில் உள்ள தனியார் விடுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை பாலியல் பாலத்காரம் செய்ததாக வீராச்சாமி (23) கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு, ஆண்மைத் தன்மை குறித்த பரிசோதனை, கோவை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

    பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிகள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் 2 சிறுமிகளும் கோவை அரசு மருத்துவமனைக்கு புதன்கிழமை அழைத்து வரப்பட்டனர். மருத்துவமனையில் உள்ள தடய அறிவியல் துறையில் அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் சிறுமிகள் இருவரும் பொள்ளாச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai