சுடச்சுட

  

  பிளஸ் 2 மறுமதிப்பீடு:1,186 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் 2-ஆம் இடம் பிடித்த கோவை மாணவர்

  By கோவை  |   Published on : 19th June 2014 03:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பிளஸ் 2 தேர்வில் மறுமதிப்பீடு செய்த கோவையைச் சேர்ந்த மாணவர் வி.எஸ்.கண்ணப்பன் 1,186 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் 2-ஆம் இடம் பிடித்துள்ளார்.

  பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியானது. இதில் கோவையைச் சேர்ந்த மேகலா 1,188 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார்.

  ரவிசங்கர் 1,186 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், திவ்யலட்சுமி, ஜெ.மெல்பா ஆகியோர் 1,185 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

  இதனிடையே பிளஸ் 2 தேர்வில் 1,171 மதிப்பெண் பெற்ற, கோவை விளாங்குறிச்சியில் உள்ள வித்யா நிகேதன் பள்ளி மாணவர் வி.எஸ்.கண்ணப்பன் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்திருந்தார். இவர் தமிழில் 187 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 184 மதிப்பெண்ணும் பெற்றார். வணிகவியல், பொருளாதாரம், கணக்குப்பதிவியல், வணிக கணிதம் ஆகிய பிற பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றிருந்தார்.

  தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண் பெறாததால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் அறிவுரையால் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தார். இதில் இரு பாடங்களில் சேர்த்து மொத்தம் 15 மதிப்பெண் கூடுதலாக கிடைத்துள்ளது.

  இதன் மூலம் அவரது மொத்த மதிப்பெண் 1,186 ஆக உயர்ந்தது. இதன் மூலம் பள்ளியில் முதல் மாணவராகி உள்ளார். மேலும் மாவட்ட அளவில் 2-ஆம் இடம் பிடித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai