Enable Javscript for better performance
பொள்ளாச்சி: 3 வழக்குகளில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சி: 3 வழக்குகளில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

    By பொள்ளாச்சி,  |   Published on : 19th June 2014 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மூன்று வழக்குகளில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பொள்ளாச்சி ஜேஎம்-1 நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2012-ஆம் ஆண்டு, நவம்பர் 13-ஆம் தேதி கேரள மாநிலம் சித்தூரில் இருந்து அஜய், ராதாகிருஷ்ணன், சுகுமார் ஆகியோர் காரில் பொள்ளாச்சி நோக்கி சென்றபோது, திவான்சாபுதூர் அருகே கார் விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த ராதாகிருஷ்ணன், சுகுமார் ஆகியோர் உயிரிழந்தனர்.

    இதேபோல, பொள்ளாச்சி - திருச்சூர் சாலையில், கடந்த 2012-ஆம் ஆண்டு, நவம்பர் 23-ஆம் தேதி காரும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆறுச்சாமி உயிரிழந்தார். அதேபோல, கடந்த 2013-ஆம் ஆண்டு, மார்ச் 20-ஆம் தேதி அம்பராம்பாளையம் சுங்கம் அருகே காரும், இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் நடராஜ் என்பவர் உயிரிழந்தார்.

    இந்த 3 வழக்குகளும் வால்பாறை உள்கோட்டம், ஆனைமலை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, பொள்ளாச்சி ஜேஎம்-1 நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவருகின்றன. அப்போது அங்கு ஆய்வாளராக பணியில் இருந்த ஜெயராமன் வழக்கின் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், பல முறை சம்மன் அனுப்பியும் இந்த 3 வழக்குகளிலும் அவர் ஆஜராகவில்லை.

    இந்நிலையில், அவர் தற்போது காங்கேயம் மதுவிலக்குப் பிரிவில் பணியாற்றுவதாக நீதிமன்றத்திற்கு கிடைத்த தகவலையடுத்து, அந்த முகவரிக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆனால், அந்த சம்மனுக்கு பதிலாக ஜெயராமன் அங்கு பணியில் இல்லை என்று பதில் வந்துள்ளது. இதையடுத்து, புதன்கிழமை பொள்ளாச்சி ஜேஎம்-1 மாஜிஸ்திரேட் லிங்கம் மூன்று வழக்குகளிலும் ஆஜராகாத ஆய்வாளர் ஜெயராமனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai