Enable Javscript for better performance
வாரியத் தேர்வில் மேட்டுப்பாளையம் நஞ்சையா-லிங்கம்மாள் பாலிடெக்னிக் மாணவர்கள் சாதனை- Dinamani

சுடச்சுட

    

    வாரியத் தேர்வில் மேட்டுப்பாளையம் நஞ்சையா-லிங்கம்மாள் பாலிடெக்னிக் மாணவர்கள் சாதனை

    By மேட்டுப்பாளையம்,  |   Published on : 19th June 2014 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டுப்பாளையம், சிறுமுகை சாலையில் உள்ள நஞ்சையா-லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கடந்த ஏப்ரல் 2014-இல் நடைபெற்ற வாரியத் தேர்வில் அதிக மதிப்பெண்ணும், தேர்ச்சியும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    இக்கல்லூரியின் சிவில் பிரிவு மாணவர் எஸ்.ஜோதீஸ்வர் 700-க்கு 689 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். எஸ்.கார்த்திகேயன் 684 மதிப்பெண்கள் பெற்று 2-ஆம் இடமும், ஏ.மூகாம்பிகை 662 மதிப்பெண்கள் பெற்று 3-ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர். மெக்கானிக்கல் பிரிவில் ஜே.வினித் 691 மதிப்பெண்களும், எம்.ஸ்ரீதர் 681 மதிப்பெண்களும், ஆர்.குமரேசன் 677 மதிப்பெண்களும் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.

    ஆட்டோமொபைல் பிரிவில் பி.சிவனேசன் 665 மதிப்பெண்களும், எம்.பாக்கியராஜ் 657 மதிப்பெண்களும், எஸ்.கார்த்திக்ராஜா 654 மதிப்பெண்களும் பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர். எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் எம்.கவின்குமார் 676 மதிப்பெண்களும், டி.மதுசூதனன் 661 மதிப்பெண்களும், கே.சகுந்தலா 651 மதிப்பெண்களும் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.

    எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் துறையில் பி.ரோஹிணி 686 மதிப்பெண்களும், கே.சக்திவேல் 685 மதிப்பெண்களும், எஸ்.சுபாகர் 683 மதிப்பெண்களும் பெற்று முதல் மூன்று இடங்களையும், கணினி அறிவியல் துறையில் எம்.பிரியதர்ஷினி 657 மதிப்பெண்களும், கே.கவிராஜ் 638 மதிப்பெண்களும், எஸ்.மதன்குமார் 573 மதிப்பெண்களும் பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.

    முதல் வருட, அடிப்படைத் தொழில் கல்வியில் எஸ்.மதுமிதா 900-க்கு 891 மதிப்பெண்களும், பி.பூபதிராஜா 881 மதிப்பெண்களும், ஆர்.பரத்ராமன் 872 மதிப்பெண்களும் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர். அனைத்து பிரிவுகளையும் சேர்த்து 1,400 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 80 சதவீதம் பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை கல்லூரி நிர்வாக அறங்காவலர் டி.கே.எஸ்.மனோகரன், இணை நிர்வாக அலுவலர் எம்.நடராஜ், கல்லூரிச் செயலர் கே.முத்துசாமி, நிர்வாக அதிகாரி டி.டி.எஸ்.பாஸ்கரன், முதல்வர் சண்முகம் மற்றும் அறங்காவலர் குழுவினரும், ஆசிரியர்களும் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai