Enable Javscript for better performance
விடுதி வார்டன் ஜாமீன் மனு தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சியில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதி வார்டன் சுரேஷ்குமாரின் ஜாமீன் மனு புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

    பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதி வார்டன் சுரேஷ்குமார், பொள்ளாச்சி ஜேஎம்-1 நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் லிங்கம் அளித்த உத்தரவு: டிஇஎல்சி தேவாலயம் சார்பில் அனுமதியில்லாமலும், பாதுகாப்பு இல்லாமலும் நடத்தப்பட்ட மாணவர் விடுதியின் பொறுப்பாளராக சுரேஷ்குமார் இருந்துள்ளார்.

    மேலும், இந்த வழக்கில் பாதிரியார் பாக்கியநாதன் தலைமறைவாக உள்ளார். அதனால், வழக்கு விசாரணையின் முக்கியத்துவம் கருதி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai