சுடச்சுட

    

    ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியில் "பிரைம் ஆரோக்யா யுவா' கிளினிக் துவக்கம்

    By கோவை  |   Published on : 19th June 2014 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிங்காநல்லூரில் உள்ள ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியில் "பிரைம் ஆரோக்யா யுவா' என்ற நவீன கிளினிக் துவக்கப்பட்டுள்ளது.

    பிரைம் இந்தியா ஹெல்த்கேர் நிறுவனம் சார்பில், கோவையில் முதல் முறையாக துவங்கப்பட்டுள்ள இந்த கிளினிக் மூலம் பள்ளி மாணவ, மாணவிகள் மன அழுத்தம், மனக் கவலை நீங்கி சுறுசுறுப்பாக இயங்கும் வகையில் ஆலோசனைகளும், சிகிச்சைகளும் வழங்கப்படும்.

    போட்டி நிறைந்த இன்றைய உலகில் மாணவர்களுக்கு சலிப்பூட்டும் பாடங்கள், அதிக மதிப்பெண் பெற தரப்படும் அழுத்தம், குறைந்த உடல் உழைப்பு, துரித உணவு வகைகள் போன்றவை குழந்தைகளின் உடல் நலத்தைப் பாதிக்கின்றன.

    இதுபோன்ற பிரச்னைகளை தீர்க்க பிரைம் ஆரோக்யா யுவா திட்டம் மூலம் மாணவர்களுக்கு மருத்துவ சேவை அளிக்கப்படும். மாணவர்களின் மருத்துவ அறிக்கை பாதுகாக்கப்படும். மாணவர்களின் உடல் நலம் குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு செய்யப்படும். உடல் நலத்தில் கோளாறு உள்ள மாணவர்களுக்கு மறுபரிசோதனை செய்யப்பட்டு, இரண்டாவது டாக்டர்களின் கருத்து கேட்கப்படும்.

    மேலும், மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலான விபத்து காப்பீடும் வழங்கப்படும்.

    மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை பிரைம் இந்தியா ஹெல்த்கேர் நிறுவனம் நடத்தும்.

    பிரைம் ஆரோக்யா யுவா கிளினிக் துவக்க நிகழ்ச்சியில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி கல்வி குழும இணைச் செயலாளர் பிரியா, பள்ளி முதல்வர் ஜெய்ஸ் குருவில்லா, பிரைம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத் சர்மா ஆகியோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai