சுடச்சுட

  

  அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிவந்த 6 லாரிகள் பறிமுதல்: ஓட்டுநர்கள் கைது

  By மதுக்கரை,  |   Published on : 20th June 2014 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவை, போத்தனூர் செட்டிபாளையத்தில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிவந்த 6 லாரிகளை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்து ஓட்டுநர்களை கைது செய்தனர்.

  இது குறித்து செட்டிபாளையம் போலீஸார் கூறியது:

  செட்டிபாளையம் சந்திப்பில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த 6 லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், உரிய அனுமதியின்றி பெரிய குயிலி பகுதியிலிருந்து கிராவல் மண் ஏற்றி வந்தது தெரியவந்தது.

  இதையடுத்து, 6 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டதோடு, ஓட்டுநர்கள், பிரீமியர் நகரைச் சேர்ந்த கே.ரங்கராஜ்(35), செட்டிபாளையத்தைச் சேர்ந்த பி.லட்சுமணன்(25), கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த எம்.மணிகண்டன்(22),

  கணபதியைச் சேர்ந்த எல்.கண்ணன்(25), பெரிய குயிலியைச் சேர்ந்த வி.கார்த்திகேயன்(27) கே.மணிகண்டன்(35)

  ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai