சுடச்சுட

  

  அரசு பணிபுரியும் மகளிர் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

  By கோவை,  |   Published on : 20th June 2014 04:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகளில் பணிபுரியும் மகளிர் தங்குவதற்காக அரசால் நடத்தப்படும் மகளிர் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகளில் ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவான மாத ஊதியம் பெறும் மகளிர் அனுமதிக்கப்பட்டு, விடுதி உள்ளுறைவோர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவர்.

  முதலில் விடுதியில் அனுமதிக்கப்படுவர்கள் நுழைவு கட்டணமாக ரூ.10 செலுத்தி விண்ணப்ப படிவம் பெற்று கொள்ளலாம். முன்பணமாக ரூ.2 ஆயிரம் செலுத்த வேண்டும்.

  அரசால் நடத்தப்படும் பணிபுரியும் மகளிர் விடுதியில் தங்குவதற்கு ஒரு மாதத்திற்கு அறை வாடகை ரூ.200-ம், மேலும் உணவு கட்டணம், மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவை பகிர்ந்தளிக்கும் முறையில் மாதந்தோறும் செலுத்த வேண்டும்.

  மேலும், இந்த விடுதியானது அனைத்து வசதிகளுடன் கோவை மாநகராட்சியின் மையப் பகுதியில் போக்குவரத்து வசதியுடன் கூடிய மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ளது.

  விடுதியில் தங்குவதற்கு விருப்பம் உள்ளவர்கள் கண்காணிப்பாளர், அரசு பணிபுரியும் மகளிர் விடுதி, கென்வின் நடுநிலைப் பள்ளி (மாநகராட்சி), பூ மார்க்கெட், மேட்டுப்பாளையம் சாலை, கோவை - 641002. தொலைபேசி எண் 0422-2545126 என்ற முகவரியில் அணுகலாம் என ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai