Enable Javscript for better performance
எல்.ஐ.சி. வீட்டுவசதி நிதிநிறுவன வெள்ளிவிழா- Dinamani

சுடச்சுட

    

    எல்.ஐ.சி. வீட்டுவசதி நிதிநிறுவன வெள்ளிவிழா

    By பெ.நா.பாளையம்  |   Published on : 20th June 2014 04:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எல்.ஐ.சி. வீட்டு வசதி நிதிநிறுவனத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

    துடியலூரில் கிளையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, எல்.ஐ.சியின் முதுநிலை முதன்மைக் கோட்ட மேலாளர் ரவிக்குமார் தலைமை வகித்தார். எல்.ஐ.சி. வணிக மேலாளர் ராமகிருஷ்ணன், துடியலூர் கிளை வணிக மேலாளர் எஸ்.பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ஸ்ரீ வாரி பில்டர்ஸ் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லுன்ட், ஸ்ரீவத்சவா பில்டர்ஸ் நிர்வாக இயக்குநர் ராமசாமி ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.

    விழாவில் பங்கேற்ற வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு நிதிநிறுவன செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டன. இந்நிறுவனத்தின் பொதுமேலாளர் ரமேஷ், துணை மேலாளர் குகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai