சுடச்சுட

  

  கன மழையால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒன்றரை மீட்டர் உயர்வு

  By கோவை,  |   Published on : 20th June 2014 04:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் ஒன்றரை மீட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளது.

  கோவைக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் சிறுவாணி அணையின் மொத்த கொள்ளளவான நீர்மட்ட உயரம் 878.5 மீட்டர் ஆகும். போதிய மழையின்மை காரணமாக நீர்மட்டம் வெகுவாகக் குறைந்தது.

  இந் நிலையில், குகை நீர்ப்பாதையை கேரள அரசு அடைத்துவிட்டதன் காரணமாக நீர் எடுத்து விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மாநகர மக்களுக்கு வழங்கப்படும் நீரின் அளவும் 50 மில்லியன் லிட்டர் அளவுக்கு குறைந்தது. தொடர்ந்து 15 நாள்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யும் அளவுக்கு அணையின் நீர்மட்டம் போதுமானதாக இருந்தது.

  இதனிடையே, கேரளத்தில் தென் மேற்குப் பருவ மழை பெய்யத் தொடங்கியுள்ளதால், சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி சுமார் 135 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 866 மீட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது, நீர்மட்டம் ஒன்றரை மீட்டர் அளவுக்கு அதிகரித்துள்ளது.

  இதனால் மாநகர மக்களுக்கு வழங்கப்படும் நீரின் அளவு 70 மில்லியன் லிட்டராக உயர்ந்துள்ளது. சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மாநகரில் சில மாதங்களுக்கு குடிநீர் பிரச்னை ஏற்படாது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai