சுடச்சுட

    

    கல்லூரி மாணவியர் 26 பேர்வாந்தி, மயக்கத்தால் பாதிப்பு

    By கோவை  |   Published on : 20th June 2014 04:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவி விடுதிகளில் தங்கியுள்ள 26 மாணவிகள் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கோவை கணபதியில் உள்ள சி.எம்.எஸ். கலை, அறிவியல் கல்லூரிக்கு சொந்தமாக மாணவிகள் விடுதி இயங்குகிறது. இந்த விடுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் விடுதியில் தங்கியுள்ள சில மாணவிகள் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆவாரம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவிகள் விடுதியில் தயாரிக்கப்பட்ட உணவு மாதிரிகளை மாவட்ட உணவு கட்டுப்பாட்டு அலுவலர் சேகரித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai