சுடச்சுட

  

  கோயம்புத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் 4-ஆவது முறையாக "கான்மேட் 2014' என்ற பெயரில் கட்டுமானத் துறை கண்காட்சியின் அறிமுக விழா புதன்கிழமை நடைபெற்றது.

  கோவையில் வரும் செப்டம்பர் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை மூன்று நாள்களுக்கு இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது. கண்காட்சியின் அறிமுக விழாவும், சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் உறுப்பினர்களுக்கான உடல் நலம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கமும் நடைபெற்றது.

  இதற்கு அசோசியேஷன் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நேட்சுரோபதி இயக்குநர் வி.ஆர்.அறிவழகன் மருத்துவ முகாமையும், உடல் நலம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கையும் துவக்கி வைத்துப் பேசினார்.

  கோவை ஃபெடரேஷன் ஆஃப் டிரேட் அசோசியேஷன் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் "கான்மேட் 2014' கண்காட்சி மலரை வெளியிட்டார். கோவை அவிநாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் கான்மேட் கண்காட்சி நடைபெறவுள்ளது. சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் அமைக்கப்படவுள்ள அரங்கில் வீடு கட்டுமானம் தொடர்பாக மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நேரடியாக தேர்ச்சி பெற்ற வல்லுநர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். துணைத் தலைவர் என்.குருவாயூரப்பன், செயலர் சி.சசிகுமார், பொருளாளர் எம்.சுரேஷ்குமார், நிறுவனத் தலைவர் கே.ராகவன், ஆலோசகர் ஜி.மெளனசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai