சுடச்சுட

  

  இந்து முன்னணி நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கோவையில் இந்து முன்னணி அமைப்பினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் அருகில் இந்து முன்னணி அமைப்பின் மாவட்டத் தலைவர் தசரதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  "திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இந்து முன்னணித் தலைவர் சுரேஷ் வெட்டி படுகொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்து முன்னணி அமைப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இந்து அமைப்பு நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

  ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் குரு, துணைத் தலைவர் முரளி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சார்பில் மாநில பொதுச் செயலாளர் செந்தில் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai