சுடச்சுட

    

    சரக்கு லாரிகள் தேக்கத்தால் கோவை-பாலக்காடு சாலையில் போக்குவரத்து பாதிப்பு

    By மதுக்கரை,  |   Published on : 20th June 2014 04:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாவட்டத்தை ஒட்டிய கேரள சோதனைச் சாவடியில் சரக்கு லாரிகள் தேக்கத்தால் கோவை-பாலக்காடு சாலையில் வியாழக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கேரள மாநிலம், சந்திராபுரம் சோதனைச் சாவடியில் கடந்த இரண்டு நாள்களாக சரக்கு வாகனத் தணிக்கை மந்தமாக நடைபெறுகிறது. இதனால், சந்திராபுரத்திலிருந்து தமிழக எல்லைப் பகுதியான நவக்கரை வரை சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு சாலையில் சரக்கு லாரிகள் தேக்கமடைந்துள்ளன. இதனால் கோவை-பாலக்காடு சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் க.க.சாவடியிலிருந்து வேலந்தாவளம் வழியாக செல்வதால் பாலக்காடு சாலையிலுள்ள தமிழக, கேரள எல்லைப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேரள சோதனைச் சாவடியில் வாகனத் தணிக்கையை விரைவுபடுத்தி, போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக, கேரள எல்லைப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai