Enable Javscript for better performance
சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் ஆஜராக மாட்டோம்: பொள்ளாச்சி வழக்குரைஞர் சங்கத்தினர் தீர்மானம்- Dinamani

சுடச்சுட

    

    சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் ஆஜராக மாட்டோம்: பொள்ளாச்சி வழக்குரைஞர் சங்கத்தினர் தீர்மானம்

    By பொள்ளாச்சி,  |   Published on : 20th June 2014 04:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொள்ளாச்சி, டிஇஎல்சி தேவாலய விடுதி சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் சார்பாக, பொள்ளாச்சி வழக்குரைஞர்கள் யாரும் ஆஜராகப் போவதில்லை என அச்சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    பொள்ளாச்சி டிஇஎல்சி தேவாலய மாணவர் விடுதியில் இருந்த இரு சிறுமிகள் கடந்த 11-ஆம் தேதி இரவு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக வீராச்சாமியும், அனுமதியில்லாமல் விடுதி நடத்தியதற்காக விடுதி வார்டன் சுரேஷ்குமாரும் கைது செய்யப்பட்டனர்.

     இதையடுத்து, விடுதி வார்டன் சுரேஷ்குமார், பொள்ளாச்சி ஜேஎம்-1 நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு புதன்கிழமை மனு தாக்கல் செய்தார். ஆனால், மாஜிஸ்திரேட் லிங்கம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

    இந்நிலையில், சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு ஆதரவாக பொள்ளாச்சி வழக்குரைஞர் ஆஜரானது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து, பொள்ளாச்சி வழக்குரைஞர்கள் சங்கப் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வழக்குரைஞர் சங்கத் தலைவர் துரை தலைமை வகித்தார். செயலாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில், டிஇஎல்சி தேவாலய விடுதியில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்காக பொள்ளாச்சி வழக்குரைஞர்

    சங்கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் யாரும் ஆஜராவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொருளாளர் கண்ணப்பன், உப தலைவர் சிவக்குமார், உதவி செயலாளர் கிடியன் சுரேஷ் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai