Enable Javscript for better performance
ஜம்போ சர்க்கஸ் நிகழ்ச்சி இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கோவை வ.உ.சி. மைதானத்தில் ஜம்போ சர்க்கஸ் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

    கடந்த 1977 ஆம் ஆண்டு பிகார் மாநிலத்தில் தொடங்கப்பட்ட ஜம்போ சர்க்கஸ் நிறுவனம், கோவையில் சர்க்கஸ் நிகழ்ச்சியை நடத்துகிறது.

    சுமார் 100-க்கும் மேற்பட்ட இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த கலைஞர்களின் பல்வேறு சாகசங்களுடன் கூடிய சர்க்கஸ் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த சர்க்கஸ் நிகழ்ச்சி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    யானை, குதிரை, ஒட்டகம், ஆப்பிரிக்கன் கிளிகள், ஐரோப்பிய கிளிகள் மற்றும் நாய்களின் சாகசங்களும் இடம்பெறுகின்றன. சாகச கலைஞர்கள் 30 அடி உயர சுழலும் சக்கரத்தில் அந்தரத்தில் "ஸ்கிப்பிங்' ஆடும் நிகழ்ச்சி மெய்சிலிர்க்க வைக்கும்.

    மிகப்பெரிய ஏணியில் முட்டை மற்றும் தண்ணீரை கொண்டு நடத்தப்படும் லேடார் பேலன்ஸ் நிகழ்ச்சி, நாற்பது அடி உயரத்தில் தனி ஒரு ரோப்பில் செய்யப்படும் ரிங் பேலன்ஸ் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    இந் நிகழ்ச்சியானது கோவையில் தினசரி 3 காட்சிகளாக மதியம் 1, மாலை 4, இரவு 7 மணிக்கு நடைபெறும். நுழைவுக் கட்டணமாக ரூ.70, ரூ.120, ரூ.200, ரூ.300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.200 மற்றும் ரூ.300-க்கான நுழைவுச் சீட்டு மட்டும் முன்பதிவு செய்யப்படும்.

    ஜம்போ சர்க்கஸ் நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் (பொறுப்பு) லீலாவதி உண்ணி தொடங்கி வைக்கிறார். எம்எல்ஏ சேலஞ்சர் துரை, மத்திய மண்டலக் குழுத் தலைவர் ஏ.ஆதிநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    இத் தகவலை ஜம்போ சர்க்கஸ் நிறுவன நிர்வாகிகள் அஜய் சங்கர், அசோக் சங்கர், மேலாளர் பவித்திரன், ஷாஜி, ராஜீவ் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai