சுடச்சுட

    

    நமது கலாசாரத்தின் மீது பெருமை கொள்ள வேண்டும்: ஜக்கிவாசுதேவ்

    By கோவை,  |   Published on : 20th June 2014 04:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நமது கலாசாரத்தின் மீது நாம் பெருமை கொள்ள வேண்டும் என சத்குரு ஜக்கிவாசு தேவ் தெரிவித்தார்.

    ஈஷா யோகா மையத்தில் வியாழக்கிழமை சத்குரு தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் களரி விளையாட்டுடன் சத்சங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் மத்தியில் அவர் பேசியது:

    தமிழகத்தில் பூம்புகார் என்ற துறைமுக நகரத்திலிருந்து 11 ஆயிரம் ஆண்டுகள் முன்பே கப்பல் மூலம் வணிகம் நடைபெற்றது. ஆனால், வெளிநாட்டினர் எழுதியுள்ள புத்தகங்களில் இந்த பிரபஞ்சமே மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் உருவானதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

    நமது கலாசாரத்தின் மீது நாம் பெருமை கொள்ள வேண்டும். பெருமை இல்லாத சமுகத்தால் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியாது. எனவே நமது கலாசாரத்தின் மூலம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிட வேண்டும். அன்றாட வாழ்வில் கலாசாரத்தை பின்பற்ற வேண்டும். அதன் மூலம் விஞ்ஞானபூர்வமான ஆன்மிகத்தை நிலை நிறுத்த முடியும்.

    பாரதம் என்ற சொல்லில் உள்ள "பா' என்பது உணர்ச்சியை குறிக்கிறது, "ர' என்பது படைத்தலை குறிக்கிறது, "த' என்பது தாளத்தை குறிக்கிறது. எனவே படைத்தலுடன் இணைந்து நாம் தாளம் செய்தால், நமது வாழ்க்கை வெற்றியடையும் என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai