சுடச்சுட

  

  பட்டத்தரசியம்மன் கோவில் பூச்சாட்டுத் திருவிழா

  By பெ.நா.பாளையம்,  |   Published on : 20th June 2014 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த சாமிசெட்டிபாளையம் சாலை, அம்பேத்கர் நகர் பட்டத்தரசியம்மன் கோவில் பூச்சாட்டுத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

  இக்கோவில் திருவிழா கடந்த ஜூன் 3-ஆம் தேதி தொடங்கியது. ஜூன் 10 -ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு தினமும் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

  திங்கள்கிழமை நள்ளிரவில் முனியப்பன் பூஜையும், செவ்வாய்க்கிழமை அம்மன் அழைப்பும் நடைபெற்றது. இதில், மதுரைவீரன், பட்டத்தரசியம்மன் உருவாரங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன. பொங்கல் விழாவையொட்டி புதன்கிழமை ராஜூ நகரில் உள்ள விநாயகர் கோவிலிருந்து சக்திக் கரகங்கள் மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் ஏந்தி வந்தனர்.

  தொடர்ந்து, அம்மனுக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்காரப் பூஜைகளும் நடைபெற்றன. மதியம் அன்னதானமும், இரவு கம்பம் கலைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டுவிழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

  விழாவுக்கு, கோவில் தர்மகர்த்தா பி.ஆர்.ஆர்.ராமு தலைமை வகித்தார். தலைவர் எஸ்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில், பெ.நா.பாளையம் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார், கவுன்சிலர் கலாவதி காளியண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai