சுடச்சுட

    

    மேட்டுப்பாளையம் நஞ்சையா-லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற ரத்ததான முகாமில் மாணவர்கள் சார்பில் 51 யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்பட்டது.

    இந்திய மருத்துவ சங்கத்துடன் இணைந்து நடைபெற்ற இம்முகாமிற்கு, பாலிடெக்னிக் முதல்வர் சண்முகம் தலைமை வகித்தார். பாலிடெக்னிக் நிர்வாக அலுவலர் டி.டி.எஸ். பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மருத்துவ சங்கத் தலைவர் திப்பையா வரவேற்றார். முகாமை, பாலிடெக்னிக் செயலர் முத்துசாமி துவக்கி வைத்தார். ரத்த தானத்தின் பயன்கள் குறித்து அரசு மருத்துவர்கள் சேரலாதன், இளங்கோ ஆகியோர் பேசினர்.

    இதில், பாலிடெக்னிக் நாட்டு நலப்பணித்திட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று 51 யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கினர். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் செல்வராஜ் தலைமையிலான மருத்துவக்குழுவினர், மாணவர்களிடமிருந்து ரத்தத்தை சேகரித்தனர்.

    பாலிடெக்னிக் துணை முதல்வர் கெளசல்யா, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ராஜ்குமார், கெளசல்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai