Enable Javscript for better performance
பி.ஐ.இ.டி. கல்லூரி சார்பில் அரசுப் பள்ளிக்கு வாயிற்கதவு வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    பி.ஐ.இ.டி. கல்லூரி சார்பில் அரசுப் பள்ளிக்கு வாயிற்கதவு வழங்கல்

    By பொள்ளாச்சி,  |   Published on : 20th June 2014 04:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆனைமலை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, பொள்ளாச்சி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி கல்லூரி சார்பில் ஒன்றரை லட்சம் மதிப்பிலான மூன்று வாயிற் கதவுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.

    இதன் திறப்புவிழா மற்றும் நன்கொடையாளருக்கு பாராட்டுவிழா செவ்வாய்க்கிழமை ஆனைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    இதற்கு, பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் சண்முகவடிவு தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் பாலசுப்ரமணியம், ஆனைமலை பேரூராட்சித் தலைவர் சாந்தலிங்ககுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் முருகேசன் வரவேற்றார்.

    பூசாரிபட்டி, பொள்ளாச்சி இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி கல்லூரிச் செயலர்

    அருள்மொழி வாயிற்கதவை திறந்து வைத்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai