சுடச்சுட

    

    போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்ததாக பெண் உள்பட 2 பேரை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

    கோவை சீரநாயக்கன்பாளையம், ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன் பிரபு (48). இவருக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கடந்த 1997-ஆம் ஆண்டு வீரகேரளம் பகுதியில் 6 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டது. இந் நிலையில், தவணை முறையில் ரூ.2.93 லட்சம் செலுத்தி, கடந்த 2007-ஆம் ஆண்டு நிலத்தை சொந்தமாக்கியுள்ளார்.

    இந் நிலையில், தொழில் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக வடமாநிலத்தில் வசித்து வந்துள்ளார். பின்னர் கோவை திரும்பியபோது அவரது நிலம் போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, கோவை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் அவர் புகார் அளித்தார்.

    இதில் தனது பெயரில் உள்ள நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து ரூ.13 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர். நில விற்பனை தொடர்பான ஆவணத்தில் கணபதியைச் சேர்ந்த மரகதமணி (42), சஞ்சீவ்காந்தி (32) ஆகியோர் சாட்சி கையெழுத்து போட்டுள்ளனர் எனத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சாட்சி கையெழுத்து போட்ட மரகதமணி, சஞ்சீவ்காந்தி ஆகியோரை கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai