Enable Javscript for better performance
மேட்டுப்பாளையத்தில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மேட்டுப்பாளையத்தில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

    By மேட்டுப்பாளையம்  |   Published on : 20th June 2014 04:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டுப்பாளையம் பகுதியில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும், சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை விசாரிக்க பிரத்யேக நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

     நகரப் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மேட்டுப்பாளையம் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் கனகசுந்தரம் தலைமை வகித்தார்.

    முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்ற வளாகத்திலிருந்து பேருந்து நிலையம் வரை வழக்குரைஞர்களின் கவனஈர்ப்பு பேரணி நடைபெற்றது.

    கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ஆம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பு நடைபெறுவதுடன் உண்ணாவிரதம் உள்பட பல்வேறு போராட்டங்களிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai