சுடச்சுட

    

    வளர் இளம் பருவத்தினருக்கு இரும்புச் சத்து மாத்திரை வழங்கும் திட்டம் தொடக்கம்

    By கோவை,  |   Published on : 20th June 2014 04:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இரும்பு சத்து மாத்திரை வழங்கும் திட்டத்தை ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

    விழாவில் ஆட்சியர் பேசியது: மாணவ, மாணவிகள் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பதற்காக இத்திட்டத்தை தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ளார். வளர் இளம் பருவத்தினருக்கு இரும்புச் சத்து மிகவும் அவசியம்.

    ரத்த சோகையைத் தடுப்பதற்கும், இளம் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி முறையாக ஏற்படுவதற்கும் இரும்பு சத்து அவசியமானது.

    6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ,

    மாணவியர் அனைவருக்கும் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமையன்று இந்த இரும்புச் சத்து மற்றும் போலிக் அமில மாத்திரைகள் மதிய உணவுக்குப் பிறகு, ஆசிரியர்கள் மேற்பார்வையில் வழங்கப்படுகிறது.

    அதேபோல பள்ளிக்குச் செல்லாத 10 வயது முதல் 19 வயது வரை உள்ள பெண்களுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாக இந்த இரும்புச் சத்து மற்றும் போலிக் அமில மாத்திரைகள் வாரந்தோறும் வியாழக்கிழமை நாள்களில் வழங்கப்படுகிறது என்றார்.

    எம்.எல்.ஏ-க்கள் தா.மலரவன், சேலஞ்சர் துரை, வி.சி.ஆறுக்குட்டி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி, மாநகராட்சி மண்டலத் தலைவர் பெருமாள்சாமி, முதன்மைக் கல்வி அலுவலர் அ.ஞானகெளரி, மாநகராட்சி கல்விக் குழுத் தலைவர் சாந்தாமணிராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai