சுடச்சுட

  

  அங்கன்வாடி கட்டட மரச் சட்டம் முறிந்ததில் மேற்கூரை சேதம்

  By கோவை,  |   Published on : 21st June 2014 03:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோவை அருகே அங்கன்வாடி கட்டட மரச் சட்டம் வெள்ளிக்கிழமை முறிந்ததில் மேற்கூரை சேதமடைந்தது.

  கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம், கொண்டையம்பாளைம் ஊராட்சிக்கு உள்பட்ட வையம்பாளையத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு ரூ.45 ஆயிரம் செலவில் அங்கன்வாடி மையம் புதுப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் வெள்ளிக்கிழமை அங்கன்வாடி மையத்தில் வழக்கம் போல் குழந்தைகள் படித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மேற்கூரை மரச் சட்டம் முறிந்ததில் சில ஓடுகள் கீழே விழுந்தன. ஆனால் மையத்தில் இருந்த குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். அவர்கள் அனைவரும் உடனடியாக மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.இந்த அங்கன்வாடி மைய கட்டடத்தை புதுப்பிக்கும்போது மேற்கூரையில் இருந்த பழைய மரங்களை மாற்றாமல் பணிகளை மேற்கொண்டதால்தான் தற்போது மேற்கூரை மரச் சட்டம் முறிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

  இது குறித்து தகவலறிந்த ஒன்றியத் தலைவர் கிருஷ்ணசாமி, ஊராட்சித் தலைவர் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பத், ஸ்ரீதர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். மேற்கூரையை சரிசெய்யும் வரை குழந்தைகளை அருகில் தங்க வைக்கும்படி அங்கன்வாடி பணியாளர்களுக்கு அரசு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai