சுடச்சுட

  

  கோவை பீளமேட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த கலந்தாய்வில் 527 மாணவர்கள் சேர்க்கைக்கான அனுமதி கடிதம் பெற்றுள்ளனர்.

  பீளமேட்டில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது. இதில் 1,300 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. சிவில், எலக்ட்ரிக்கல் அன்டு எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், புரடக்ஷன், எலக்ட்ரானிக்ஸ் அன்டு கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் ஆகிய 6 பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடந்தது. இதில் 527 பேர் சேர்க்கைக்கான அனுமதி கடிதம் பெற்றுள்ளனர்.

  முதல் ஷிப்ட் பாட வேளையில் 360 இடங்களும், இரண்டாவது ஷிப்ட் பாட வேளையில் 240 இடங்களும் என மொத்தம் 600 இடங்கள் உள்ளன. தற்போது எல்க்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்டு கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் ஆகிய பாடப் பிரிவுகளில் 73 இடங்கள் காலியாக உள்ளன.

  காலி இடங்களுக்கு திங்கள்கிழமை கலந்தாய்வு நடத்தப்படும் என பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மதிவாணன் தெரிவித்தார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai