சுடச்சுட

    

    ஆஸ்திரேலியாவில் கல்வி, வேலைவாய்ப்பு: மாணவர்களுடன் கலந்துரையாடல்

    By கோவை  |   Published on : 21st June 2014 03:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆஸ்திரேலியாவில் கல்வி, வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி சம்பந்தமான வாய்ப்புகள் குறித்து அந்நாட்டு பிரதிநிதிகள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினர்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி, பலவிதமான கிரகங்கள், ராசிகள், நட்சத்திரங்கள் முதலிய வான சாஸ்திரங்கள் இந்தியாவில் பெருமை கொள்ளும் அளவிற்கு வளர்ந்துள்ளன என்றும், இந்திய வரலாற்றில் பலதரப்பட்ட ஆராய்ச்சிகள் வளர்ந்து விரிவடைந்துள்ளன என்றும் கூறினார்.

    ஆஸ்திரேலிய தூதரகத்தின் தென்னிந்திய அதிகாரிகள் சியான் கெல்லி, மைக்கேல் கர்தார் ஆகியோர் தங்களது நாட்டின் கல்வி, வேலைவாய்ப்பு பற்றிய அறிவுரைகளை வழங்கினர். பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குநர் ம.மகேஸ்வரன், பேராசிரியர்கள் ச.மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai