Enable Javscript for better performance
எல்.கே.ஜி. சீட் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடி செய்தவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    எல்.கே.ஜி. சீட் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடி செய்தவர் கைது

    By கோவை  |   Published on : 21st June 2014 03:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் உள்ள பிரபல பள்ளிகளில் எல்.கே.ஜி. சீட் வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பண மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

    கோவை உக்கடம் அல் அமீன் காலனி பகுதியைச் சேர்ந்த முகமது சிராஜ் (43) உள்ளிட்ட சிலர், மாநகர காவல் துணை ஆணையர் பிரவேஷ்குமாரிடம் வியாழக்கிழமை புகார் மனு அளித்தனர். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

    கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் ராஜ்குமார் (38). அவரது மனைவி ஷெர்லின் (35). இவர்கள் எங்களது குழந்தைகளுக்கு பிரபல பள்ளிகளில் எல்.கே.ஜி. சீட் வாங்கித் தருவதாகக் கூறினர். அதற்காக ஒரு சீட்டுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் பணம் வசூலித்தனர். இதனை நம்பி பலர் அவரிடம் பணம் கொடுத்துள்ளோம்.

    ஆனால், பள்ளிகள் தொடங்கிய நிலையில், உறுதியளித்தபடி சீட் வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளனர் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

    இது குறித்து மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வின்சென்ட் ராஜ்குமாரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது மனைவியை போலீஸார் தேடி வருகின்றனர்.

    பிரபல பள்ளிகளில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி, அதே பகுதியைச் சேர்ந்த பலரிடம் இவர்கள் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai