சுடச்சுட

  

  கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி உண்மையான ஏழைகளை சேர்க்க வேண்டும்

  By கோவை,  |   Published on : 21st June 2014 03:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி (ஆர்.டி.இ.) உண்மையான ஏழை மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

  இது தொடர்பாக மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் வே.ஈஸ்வரன், தமிழக கல்வி அமைச்சருக்கு வெள்ளிக்கிழமை எழுதிய கடித விவரம்:

  கோவை மாவட்டத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி 4,086 இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு பெரும்பாலான ஏழைகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. ஒருசில பள்ளிகளில் ஏற்கெனவே பணம் கட்டி சேர்ந்தவர்களை ஆர்.டி.இ. சட்டப்படி சேர்ந்ததாக அறிவிக்கின்றனர். இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் பலனில்லை.

  கடந்த ஆண்டு கோடீஸ்வர வீட்டுக் குழந்தைகள் பலர் இச்சட்டப்படி பள்ளிகளில் சேர்ந்ததை ஆதாரத்துடன் நிரூபித்தோம். இது தொடர்பாக முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் புகார் அனுப்பியும் பலனில்லை.

  ஆர்.டி.இ. சட்டப்படி 25 சதவீத இட ஒதுக்கீட்டில் அதிக மாணவர்கள் சேர்ந்ததாக கணக்குக் காட்டுவதற்காக, நன்கொடை செலுத்தி சேர்க்கப்பட்ட மாணவர்களில் 25 சதவீதத்தினரை இந்த ஒதுக்கீட்டில் சேர்க்க பள்ளிக் கல்வித் துறை முனைப்பாக உள்ளதாகத் தெரிகிறது. இச்சட்டப்படி சேர்ந்தாலும் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளே தெரிவிக்கின்றனர்.

  கூடுதல் வருவாய் உள்ளவர்களை சேர்த்தால் மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மதிமுக ஆய்வு நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வரும். இவ்வாறு செய்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

  கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி உண்மையான ஏழை மாணவர்களை மட்டும் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai