சுடச்சுட

  

  கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட கவுண்டம்பாளையத்தில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

  ஹவுசிங் யூனிட் பகுதி, அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு மாநகராட்சி நியமனக்குழு உறுப்பினரும், கவுன்சிலருமான வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கோவை வடக்கு வட்டாட்சியர் முருகன் வரவேற்றார். சட்டப்பேரவை உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி முகாமைத் துவக்கிவைத்தார். தொடர்ந்து அவர், ரேஷன் கார்டுகளில் முகவரி மாற்றம், ஜாதிச் சான்றிதழ்கள், இருப்பிடச் சான்றிதழ்களை விண்ணப்பதாரர்களுக்கு வழங்கினார்.

  இதில், மண்டலத் தலைவர் சாவித்திரி பார்த்திபன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கே.எஸ்.மகேஷ்குமார், மாரிமுத்து, சரஸ்வதி, சின்னு, மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளர் அலாவுதீன், பெ.நா.பாளையம் ஒன்றியச் செயலாளர் கோவனூர் துரைசாமி, குடிமைப் பொருள் பிரிவு வட்டாட்சியர் ஜெயசித்ரா, வருவாய் ஆய்வாளர் குணசேகரன், கிராம நிர்வாக அலுவலர் பண்ணாரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai