சுடச்சுட

    

    குடிசைப் பகுதி மக்களுக்கு வீடுகள் கட்டித்தர மத்திய அமைச்சருக்கு கோரிக்கை

    By மேட்டுப்பாளையம்  |   Published on : 21st June 2014 03:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய குடிசைப் பகுதி மக்களுக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, மேட்டுப்பாளையம் நகர்மன்றத் தலைவர் சதீஷ்குமார் சார்பில் மத்திய நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் குடிசைப் பகுதி மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

    மேட்டுப்பாளையம் நகராட்சி சுமார் 75,000 மக்கள் தொகையை கொண்ட தேர்வு நிலை நகராட்சியாகும். இந்நகராட்சியில் உள்ள 21 குடிசைப் பகுதிகளில் பெரும்பாலும் ஏழை, எளிய கூலித் தொழிலாளர்களே வசிக்கின்றனர். வறுமை நிலை காரணமாக அவர்களால் புதிதாக வீடுகள் கட்டி குடியிருக்க வாய்ப்பில்லை. இந்நகராட்சியில் ஏற்கெனவே ஒரு வார்டு பகுதி மக்களுக்கு ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 72 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இத்திட்டத்தை பிற பகுதிகளிலுள்ள மக்களுக்கு செயல்படுத்த முடியவில்லை. இதனால் மற்ற பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கும் ஏதாவது திட்டத்தில் வீடுகள் கட்டித்தர வேண்டுமென நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

    எனவே, மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதிகளில் வசித்துவரும் ஏழை மற்றும் குடிசைப் பகுதி மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு மத்திய அரசின் ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி, வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai