சுடச்சுட

  

  கோவை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் இரண்டாவது கட்ட ஆய்வு சனிக்கிழமை நடத்தப்பட உள்ளது.

  கோவை மாவட்டத்தில் 85 குழந்தைகள் காப்பகங்கள் உள்ளன. இதில் 19 காப்பகங்கள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே, பொள்ளாச்சி டி.இ.எல்.சி. விடுதியில் 2 மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் ஆதரவற்ற இல்லங்களில் ஆட்சியரின் உத்தரவின்பேரில் ஆய்வு செய்யப்பட்டது.

  இந்த ஆய்வில் 35 காப்பகங்கள் போதிய வசதிகள் இல்லாமலும், பதிவை புதுப்பிக்காமலும் இருப்பது தெரியவந்தது. போதிய வசதிகளை மேம்படுத்தவும், பதிவை புதுப்பிக்கவும் அதிகாரிகள் குழுவினர் உத்தரவிட்டனர்.

  இதனிடையே சனிக்கிழமையும் காப்பகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. போதிய விதிமுறைகளை பின்பற்றாத காப்பகங்களை மூட நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது என குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். மிக மோசமான நிலையில் இருந்த, துடியலூர் என்.ஜி.ஜி.ஓ. காலனியில் உள்ள ஜீவஜோதி குழந்தைகள் காப்பகம், பொம்மண்ணம்பாளையத்தில் உள்ள நியூலைப் குழந்தைகள் காப்பகம் ஆகிய இரண்டு காப்பகங்களையும் உடனடியாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, இரண்டு காப்பகங்களும் மூடப்பட்டன. இந்த காப்பகங்களில் தங்கியிருந்தவர்கள் மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி மூலம் இயக்கப்படும் டான் பாஸ்கோ அன்பு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சில மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai