சுடச்சுட

    

    தனிப்பட்ட புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது

    By கோவை,  |   Published on : 21st June 2014 03:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனிப்பட்ட முறையில் அளிக்கப்படும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கோயமுத்தூர், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) கோரிக்கை விடுத்துள்ளது.

    இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவருக்கு, காட்மா தலைவர் எஸ்.ரவிக்குமார் வெள்ளிக்கிழமை எழுதிய கடித விவரம்:

    கோவை சரவணம்பட்டி சின்னமேட்டுப்பாளையத்தில் காட்மா உறுப்பினர் ஒருவர் குறுந்தொழில் கூடத்தை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். வீட்டின் ஒரு பகுதியில் 5 எச்.பி. மின் இணைப்புடன் லேத் பட்டறையை கணவன், மனைவி இருவரும் நடத்தி வருகின்றனர்.

    இந்த இடத்தின் அருகே உள்ள இடத்தை வேறொருவர் வாங்கி வீடு கட்டினார். இருவருக்கும் உறவு சுமுகமாக இருந்தபோது பிரச்னையில்லை. ஆனால் இப்போது லேத் பட்டறையில் இருந்து அதிக சத்தம் வருவதாக தொடர்ந்து புகார் செய்து வருகிறார். குறுந்தொழில் கூடத்தை மூட வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் செயல்படுகிறார்.

    இப்புகாரின் அடிப்படையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், குறுந்தொழில் கூடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    மொத்தமுள்ள 37 குடியிருப்புவாசிகளில் 36 பேர், லேத் பட்டறையால் தங்களுக்குப் பிரச்னை இல்லை என்று கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளனர். ஒருவரின் புகாருக்காக பட்டறையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வலியுறுத்துவது வேதனை தருகிறது. அந்த பட்டறை அங்கேயே தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டும்.

    கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர். இதில் 90 சதவீதம் குறுந்தொழில் கூடங்கள் குடியிருப்புப் பகுதிகளில் இயங்கி வருகின்றன.

    குறுந்தொழில் கூடங்களுக்கென தனியாக தொழிற்பேட்டை அமைத்துத் தருமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அதுவரை குறுந்தொழில் கூடங்கள் மீது அந்தந்தப் பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான குடியிருப்புவாசிகள் புகார் தெரிவிக்காதபோது நடவடிக்கை எடுக்கக் கூடாது. ஒருசிலர் தனிப்பட்ட முறையில் அளிக்கும் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai