சுடச்சுட

  

  ரூ.45 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்து விற்றதாக, ஓய்வு பெற்ற பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

  கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (31). பெங்களூரில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

  கோவை என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் காட்டூர் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் மகாதேவனிடம் இருந்து 9 சென்ட் நிலம் வாங்கியுள்ளார் ஜெகதீஷ். இதற்காக கடந்த 2010-ஆம் ஆண்டுமுதல் தவணை முறையில் ரூ.17 லட்சம் செலுத்தியுள்ளார். இதையடுத்து கடந்த 2012-ஆம் ஆண்டு நிலத்தை ஜெகதீஷ் பெயருக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார் மகாதேவன்.

  இந்நிலையில் தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்ட முடிவு செய்து, ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிக்காக ஜெகதீஷ் சென்றுள்ளார். அப்போது அங்கு ஆழ்குழாய் கிணறு அமைக்க ராஜமாணிக்கம் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

  கடந்த 2008-ஆம் ஆண்டு தனக்கு வேண்டியவரான ராதாமணாளன் என்பவருக்கு அந்த நிலத்தை மகாதேவன் விற்பனை செய்துள்ளார். அதன் பின்னர் அந்த நிலத்தை ராதாமணாளன் தனக்கு பவர் எழுதி கொடுத்துள்ளதாக ராஜமாணிக்கம் கூறியுள்ளார்.

  இதையடுத்து ரூ.45 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்து தனக்கு விற்றதாக, மகாதேவன் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

  இப்புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மகாதேவனை கைது செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai