மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி
By மதுக்கரை | Published on : 21st June 2014 03:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருமலையம்பாளையம் ஸ்ரீநாராயண குரு பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழிப்புணர்வுப் பேரணிக்கு கல்லூரி முதல்வர் தலைமை வகித்தார். மதுக்கரை காவல் உதவி ஆய்வாளர் எஸ்.ராஜேந்திரன் பேரணியைத் துவக்கி வைத்தார். செட்டிபாளையம் பிரிவில் துவங்கிய இப்பேரணி தர்மராஜா நகர், மரப்பாலம், மதுக்கரை வழியாகச் சென்று காந்தி நகர் பகுதியில் முடிவடைந்தது. இதில், கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.