சுடச்சுட

    

    மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1978-ஆம் வருடம் பள்ளி இறுதிப் படிப்பு முடித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் மரம் நடுவிழா மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

    மேட்டுப்பாளையம் சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் முன்னாள் மாணவரும், நகர மின்வாரிய செயற்பொறியாளருமான முகமது முபாரக் தலைமை வகித்தார்.

    சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளித் தாளாளர் ஜோயல், வழக்குரைஞர் சாந்தமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் மாணவர்கள் சார்பில் கேஎன்எஸ் பாலு வரவேற்றார். இதில், நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த 15 மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத் தொகையை முன்னாள் மாணவர்கள் சார்பில் நடூர் மூர்த்தி, ஜம்பு மாணிக்கம், ரமேஷ்சந்த் ஆகியோர் வழங்கினர்.

    இதில், தளபதி முருகேஷ், சிவகுமார், நசீர், ஹரிகரன், மெடிக்கல்ஸ் முருகேஷ், ஜேம்ஸ் உள்பட மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    விழா நினைவாக பள்ளி வளாகத்தில் 10 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai