சுடச்சுட

  

  தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் வளர்ச்சி கழகம் (தாட்கோ) சார்பில் கட்டப்படும் ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கான விடுதி கட்டடங்களை அதன் தலைவர் எஸ்.கலைச்செல்வன் நேரில் ஆய்வு செய்தார்.

  கோவையில் 50 ஆதிதிராவிட கல்லூரி மாணவர்களுக்காக ரூ.51.04 லட்சம் மதிப்பில் விடுதி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

  சின்னத்தடாகம் பகுதியில் 50 பழங்குடியின மாணவர்களுக்காக ரூ.78.99 லட்சத்தில் கட்டப்படும் விடுதி, காரமடை எஸ்.புங்கம்பாளையத்தில் 50 ஆதிதிராவிட மாணவருக்காக ரூ.78.99 லட்சம் மதிப்பில் கட்டப்படும் விடுதியை ஆகியவற்றை தாட்கோ தலைவர் ஆய்வு செய்தார்.

  பொள்ளாச்சியில் கட்டப்பட்டு வரும் கல்லூரி மாணவியர் விடுதி, காடம்பாறை பகுதியில் கட்டப்பட்டு வரும் மாணவர் விடுதியையும் அவர் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது தாட்கோ கோவை கோட்ட செயற்பொறியாளர் எஸ்.ஸ்ரீனிவாசன், உதவி செயற்பொறியாளர் சந்திரமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai