சுடச்சுட

  

  மாற்றுத்திறனாளிகளுக்கான பொது மருத்துவ முகாம்

  By பெ.நா.பாளையம்  |   Published on : 21st June 2014 03:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நரசிம்மநாயக்கன்பாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பொதுமருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் எஸ்.எஸ்.ஏ. திட்டம் ஆகியன இணைந்து அரசு உயர்நிலைப்பள்ளியில் நடத்திய இம்முகாமிற்கு பேரூராட்சித் தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார்.

  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மதிவாணன் முகாமின் நோக்கம் குறித்து விளக்கினார்.

  சட்டப்பேரவை உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி தலைமை வகித்து, 25 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள், மடக்கு நாற்காலி ஆகியவற்றை வழங்கினார்.

  தொடர்ந்து நடைபெற்ற மருத்துவ முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

  மேலும் இம்முகாமில், இருசக்கர வாகனம், உதவி உபகரணங்கள், தையல் எந்திரங்கள், மாதாந்திர உதவித் தொகை ஆகியன வழங்கப்பட்டன. கடனுதவி கேட்டு 157 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

  இதில், ஒன்றியக் குழுத் தலைவர் விஜயன், பேரூராட்சி துணைத் தலைவர் சம்பத், ஊராட்சித் தலைவர்கள் ராமகிருஷ்ணன், சரவணன், உஷாமாலு, செளந்திரராஜன், எஸ்.எஸ்.ஏ. திட்ட சிறப்புக் கல்வி ஆசிரியர்கள் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai