சுடச்சுட

    

    மேட்டுப்பாளையத்தில் மஹா குரு பெயர்ச்சி யாகம்

    By மேட்டுப்பாளையம்  |   Published on : 21st June 2014 03:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டுப்பாளையத்தில் அமைதி, மக்கள் நலன் வேண்டி மஹா குரு பெயர்ச்சி யாகம் மற்றும் 108 சங்காபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    மேட்டுப்பாளையம், ஸ்ரீ ராஜயோக சுப்பிரமணியர் ஜோதிட ஆராய்ச்சி மையம் மற்றும் அய்யன் திருவள்ளுவர் ஜோதிட ஆன்மிக நற்பணிக்குழு ஆகியன சார்பில் பஜனை கோவில் வீதியிலுள்ள ஸ்ரீ கோதண்டபாணி ஆலய வளாகத்தில் நடைபெற்ற 9-ஆம் ஆண்டு மஹா குரு பெயர்ச்சி யாகத்திற்கு, கோவை மாவட்ட கிராமக் கோவில் பூசாரிகள் சங்க அமைப்பாளர் ஏ.டி ரவீந்திரகாளிதாஸ் தலைமை வகித்தார்.

    நீலகிரி மாவட்ட வள்ளுவர் குலசங்க மகளிரணி தலைவர் முருகேஸ்வரி குத்து விளக்கேற்றி வைத்தார்.

    வேத விற்பன்னர் மேட்டுப்பாளையம் ஸ்ரீ ராஜகணபதி ஆலய சிவாச்சாரியார் சிவஸ்ரீ பாஸ்கர் மற்றும் குழுவினர் சார்பில் மஹா குரு பெயர்ச்சி யாக வேள்வி நடைபெற்றது.

    தொடர்ந்து ஸ்ரீ கணபதி ஹோமத்துடன் பவானி அம்மனுக்கு பூஜை, அய்யன் வள்ளுவர் படத் திறப்பு, கொடியேற்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    மஹா குரு பெயர்ச்சி யாகத்தின் நன்மை மற்றும் பலன்கள் குறித்து கொங்கு பீஷ்மாசாரியார் காரமடை முத்துகிருஷ்ணன் சொற்பொழிவாற்றினார். இதில் கோவை, பொள்ளாச்சி, அவிநாசி, காரமடை, சிறுமுகை, திருப்பூர் மற்றும் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    யாகத்தை தொடர்ந்து 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai