சுடச்சுட

  

  பின்னணிப் பாடகி வாணி ஜெயராம், எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோருக்கு, கோவையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) கண்ணதாசன் விருது வழங்கப்படுகிறது.

  இது தொடர்பாக கண்ணதாசன் கழகத்தின் செயலர் மரபின் மைந்தன் முத்தையா வெளியிட்ட செய்தி: கண்ணதாசன் கழகத்தின் சார்பில் 7-ஆவது ஆண்டாக கண்ணதாசன் விழா நடைபெற உள்ளது. கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் இவ்விழா நடைபெறும்.

  இந்த ஆண்டுக்கான கண்ணதாசன் விருது, பின்னணிப் பாடகி வாணி ஜெயராம், எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோருக்கு இவ்விழாவில் வழங்கப்படுகிறது. மதுரை தியாகராஜர் குழும நிறுவனங்களின் தலைவர் கருமுத்து தி.கண்ணன் தலைமை தாங்குகிறார். எழுத்தாளர் நாஞ்சில் நாடன், காந்தி கண்ணதாசன், பின்னணிப் பாடகர் ரமணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். கவிஞர் நந்தலாலா சிறப்புரையாற்றுகிறார்.

  பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் பாடிய கண்ணதாசனின் "ஸ்ரீகிருஷ்ண கவசம்' குறுந்தகட்டை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணன் வெளியிட, ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர்விழி பெற்றுக் கொள்கிறார். குணசேகரன் வரவேற்கிறார். தேவ ஸ்ரீனிவாசன் நன்றி கூறுகிறார்.

  விழாவை கனகதூரிகா தொகுத்து வழங்குகிறார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai