சுடச்சுட

    

    வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 9 மாத குழந்தை, வாளிதண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது.

    கோவை அசோக் நகர் செட்டி வீதியைச் சேர்ந்த நகைத் தொழிலாளி சரவணன். இவரது மனைவி செல்வி. வெள்ளிக்கிழமை செல்வி குளிக்கச் சென்றிருந்தபோது, அவரது 9 மாத பெண் குழந்தை, குளியல் அறைக்கு வெளியே இருந்த வாளி தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வாளிக்குள் விழுந்த குழந்தை, தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறி உயிரிழந்ததாக தெரிகிறது.

    இது குறித்து செல்வபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai