சுடச்சுட

    

    வெள்ளலூர் அம்மா திட்ட முகாமில் 386 மனுக்களுக்கு உடனடித் தீர்வு

    By மதுக்கரை,  |   Published on : 21st June 2014 03:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெள்ளலூர் பேரூராட்சிக்கு உள்பட்ட கிராமங்களுக்கான அம்மா திட்ட முகாமில் வெள்ளிக்கிழமை 386 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.

    இம்முகாமிற்கு, மதுக்கரை வட்டாட்சியர் தலைமை வகித்தார். இதில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 412 மனுக்கள் பெறப்பட்டன.

    இதில், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட 386 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றிற்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.

    மீதமுள்ள 26 மனுக்கள், உரிய ஆவணங்கள் சமர்பித்த பின்னர் தீர்வு காணப்படும் என வட்டாட்சியர் தெரிவித்தார்.

    இம்முகாமில் பேரூராட்சித் தலைவர் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai